ஆதார் செயலி (Aadhaar App) மூலம் ஆதாரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை UIDAI (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்) அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வசதியின் மூலம், ஆதார் சேவை மையங்களுக்கு நேரில் சென்று நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. செயலி மூலம் புதிய மொபைல் எண்ணை பதிவு செய்யலாம்.
ஆனால், செயலியில் வழங்கப்பட்ட தகவலின்படி, புதிய மொபைல் எண் ஆதாரில் அப்டேட் ஆக ஒருமாத காலம் எடுத்துக்கொள்ளும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக ரூ.75 கட்டணமாக செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன், ஆதார் சேவை மையங்களில் மொபைல் எண் மாற்றம் செய்தால் அதிகபட்சம் 10 நாட்களுக்குள் புதிய எண் அப்டேட் ஆகி வந்தது. தற்போதைய புதிய செயலி வசதியில் காலதாமதம் அதிகமாக இருப்பதால், அவசர தேவைகளுக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்குமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
