tamilnadu

img

இளம் வயதினருக்கு ஏற்படும் நீரிழிவு நோய் குறித்த ஆராய்ச்சியில் புதிய திருப்புமுனை

இளம் வயதினருக்கு ஏற்படும் நீரிழிவு நோய்  குறித்த ஆராய்ச்சியில் புதிய  திருப்புமுனை

புதிய நீரிழிவு துணை வகை கண்டுபிடிப்பு

சென்னை, மே 8- சென்னையைச்சேர்ந்த நீரிழிவு ஆராய்ச்சி அறக் கட்டளை  (MDRF) மற்றும் அமெரிக்காவின் – மிசௌரி, செயிண்ட் லூயிஸ்ல் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், இளம் வயதினருக்கு ஏற்படும் நீரிழிவு நோயின் ஒரு புதிய துணை வகையை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டு பிடிப்பா னது, இளம் வயதினருக்கு ஏற்படும் நீரிழிவு நோய் என அழைக்கப்படும் ஒரு அரி தான, மரபுவழி நீரிழிவு வடிவம் தொடர்பானதாக இருக்கிறது.  இந்த மரபுவழி நீரிழிவின் வகை குழந்தைப் பருவத்தில் மற்றும் வளரிளம் பரு வத்தில் வழக்கமாக கண்ட றியப்படுகிறது. அமெரிக்க நீரிழிவு மருத்துவர்கள் சங்கத்தால் பிரசுரிக்கப்படும் ‘டயாபடீஸ்’ என்ற புகழ்  பெற்ற அறிவியல் இதழில் அச்சில் வெளியாவதற்கு முன்பு ஆன்லைனில் இந்த கண்டுபிடிப்பு குறித்த கட்டுரை வெளியிடப்பட்டி ருக்கிறது.  சென்னை நீரிழீவு ஆராய்ச்சி அறக்கட்டளை யின் தலைவர் வி.மோகன் பேசுகையில், “இளம் வயதினருக்கு ஏற்படும்  நீரிழிவின் ஒரு துணை வகையினத்தை நாங்கள் கண்டறிந்திருப்பது எங்களுக்கு அதிக உற்சாகமளிக்கிறது என்றார். பொதுவாக நீரிழிவின் துல்லியமான நோயறிதலுக்கும் இளம் வயதினருக்கு ஏற்படும் நீரிழிவு நோயின் துணை வகையினங்களுக்கும் மரபியல் பரிசோதனை மற்றும் அவற்றின் செயல் பாடுகளை புரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவும் என்றார். புதிய வகையினத்திற்கு சிகிச்சையளிக்க நீரிழிவிற்கு எதிரான மிகச்சிறந்த மருந்து களை மதிப்பாய்வு செய்து, கண்டறிய  தொடர்ச்சி யான ஆய்வுகள் தேவைப் படுவதாகவும் அவர் தெரி வித்தார்.