சென்னை, நவ. 13 - பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புக ளுக்கு மின்சாரம் துண்டி க்கப்பட்டுள்ளது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரி வித்துள்ளது. பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 23 ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்குள்ள மக்கள் 6 கிமீ தூரம் கடந்து சென்ற பெருங்குடி அருகே உள்ள கல்லுக்குட்டை மின்வாரிய அலுவலகத்தில் மின் கட்ட ணம் செலுத்த வேண்டும். இங்குள்ள மக்கள் பலமாதமாக மின்கட்டணம் கட்டாமல் உள்ளனர். இத னால் வாரிய ஊழியர்கள் சென்று மின் இணைப்புகளை துண்டித்துள்ளனர். இதனால் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர். “இரண்டு மாதத்திற்கு ஒரு முறை அதிகாரிகள் வந்து மீட்டரை கணக்கிட்டு அட்டையில் குறித்து கொடுப்பதில்லை. ஒரு சில குடியிருப்புகளில் கணக்கெடுத்தாலும் அதனை கணினியில் ஏற்றுவதில்லை. இதனால் முறையாக மின்கட்டணம் செலுத்த முடிவதில்லை. கடந்தமுறை கட்டிய தொகையை கட்டுவதற்கு சென்றாலும் அங்குள்ள அதிகாரிகள் பல ஆயிரம் ரூபாய் கேட்கின்றனர். வாக்குவாதம் செய்தால் சில ஆயிரங்களை குறைத்து தோராயணமாக ஒரு தொகையை செலுத்த சொல்கின்றனர்” என்கிறார் அப்பகுதி குடியிருப்புவாசி யான பாஸ்கர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ஜி.வீரா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெரும்பாக்கம் வாரிய குடியிருப்பில் 20 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. மின்ஊழியர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யாமல் உள்ளனர். மக்களும் பல கிலோமீட்டர் தூரம் சென்று மின்கட்டணம் செலுத்துவதி லும் சிரமம் உள்ளது. ஆகவே, பெரும்பாக்கத்தி லேயே மின் கட்டண வசூல் மையம் ஒன்றை அமைக்க கோரி அதிகாரிகளை சந்தித்து முறையிட்டு ள்ளோம். அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். 2 மாதத்திற்கு ஒருமுறை முறையாக மின்அளவீடு செய்து கறாராக கட்டணம் வசூலிப்பதில்லை. பல மாதங்களுக்கான கட்ட ணத்தை ஒரே தவணையில் செலுத்த சொல்வதும், மின்சாரத்தை துண்டிப்பதும் சரியல்ல. எனவே, மின்வாரிய ஊழியர்கள் 2 மாதத்திற்கு ஒரு முறை வீடுகளுக்கு சென்று அளவீடு செய்ய வேண்டும். பழைய பாக்கியை கணக்கிட்டு தவணை முறை யில் பெற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரி வித்திருக்கிறார்.