tamilnadu

போடி மலை கிராமங்களில் மழை: மின்சாரம் துண்டிப்பு

தேனி:
போடி பகுதியில் சனிக்கிழமை மாலை முதலே விட்டு விட்டு சாரல்மழை பெய்து வருகிறது. போடி நகரில் ஞாயிறு காலையில் பரவலான மழை பெய்தது. போடி அருகேகுரங்கணி, கொட்டகுடி உள்ளிட்டமலைக் கிராமங்களில் சனிக்கிழமைஇரவு முழுவதும் காற்றுடன் நல்லமழை பெய்து வந்தது.இதனால் சனிக்கிழமை இரவுமுழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரமின்றி மலைக்கிராம மக்கள் அவதிக்குள்ளாயினர். ஞாயிறு காலையிலும் மலைக் கிராமங்களில் பரவலான மழை பெய்து வரும் நிலையில் மின்சார விநியோகம் தடைப்பட்டது. காற்றினால் மின் வயர்களில் மரக்கிளைகள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்பட்டது.போடி துணை மின் நிலையத்திலும், ராசிங்காபுரம் துணை மின் நிலையத்திலும் மின் பழுதுகள் சரிசெய்யப்பட்டு பிற்பகலில் மின் விநியோகம் வழங்கப்பட்டது.

தொடர் மழையால் கொட்டகுடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. குரங்கணி நரிப்பட்டி பகுதியில் உள்ள நகராட்சி குடிநீர் தேக்கத்தொட்டி நிரம்பியது. நரிப்பட்டி பகுதியில் தண்ணீர் பலத்த இறைச்சலுடன் பாய்ந்து செல்கிறது.