சென்னை, ஏப்.24-கிரானைட் முறைகேடு வழக்கில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதியின் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மதுரை கீழவளவில் செயல்பட்டு வந்த ஒலிம்பஸ் கிரானைட் குவாரி மீது, முறைகேடாக கிரானைட் கற்களை வெட்டியெடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்ததை அடுத்து கிரானைட் குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்ட 15 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் கிரானைட் முறைகேடு வழக்கில் துரை தயாநிதியின் சுமார் 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை மற்றும் சென்னையிலுள்ள 25 அசையும், அசையா சொத்துகள் மற்றும் வைப்புநிதி உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.