tamilnadu

65ஆவது நாளாக ஜம்மு-காஷ்மீர் முடக்கம்

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இயல்பு நிலை 65ஆவது நாளாக தொடர்ந்து கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. மார்க்கெட்டுகளும், இதர வணிக நிறுவனங்களும் தொடர்ந்து மூடியே இருக்கின்றன. பொதுப் போக்குவரத்துகளும் அதிகமான அளவிற்கு இயங்கவில்லை என்றே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். எனினும் தனியார் வாகனங்களும், சில தனியார் டாக்சிகளும் ஆட்டோ ரிக்சாக்களும் இயங்குவதாகவும், சாலையோர வியாபாரிகள் தங்கள் வியாபாரத்தைச் செய்வதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். தரைவழித் தொலைபேசி சேவைகள் மீண்டும் அளிக்கப்பட்டிருக்கிற அதே சமயத்தில், மொபைல் போன்கள் இன்னமும் செயல்படவில்லை.  இணைய சேவை ஆகஸ்ட் 5 அன்று துண்டிக்கப்பட்டது தொடர்கிறது. காஷ்மீர் அரசியல்வாதிகளில் அநேகமாக அனைத்து உயர்மட்டத் தலைவர்களும், தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். (பிடிஐ)