tamilnadu

img

திமுகவிற்கு வாக்களித்த கிராமங்களில் குடிநீர் விநியோகம் முடக்கம் சேலம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. குற்றச்சாட்டு

சேலம், மே 28-திமுகவிற்கு வாக்களித்த பல கிராமங்களில் குடிநீர் விநியோகத்தை அதிமுகஅரசு முடக்கி வைத்துள்ளது என சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் குற்றச்சாட்டியுள்ளார்.சேலம்  நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் வெற்றி பெற்றார்.இதையடுத்து திங்கள்கிழமை முதல்வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துசுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்ஒருபகுதியாக கன்னங்குறிச்சிபேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்துபகுதியிலும், சேலம் மத்திய மாவட்ட திமுகசெயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ராஜேந்திரன் தலைமையில், வீதி வீதியாக நடந்து சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு பொது மக்கள் ஆரத்தி எடுத்தும், பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், வாக்கு எண்ணிக்கை முடிந்தநாள் முதல் இன்று வரை சேலம்நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்டபல கிராமங்களில் குடிநீர் விநியோகத்தை அதிமுக அரசு முடக்கி வைத்துள்ளது. குறிப்பாக திமுகவிற்கு வாக்களித்த பல பகுதியில் குடிநீர் விநியோகத்தை வேண்டுமென்ற நிறுத்தி வைத்து மலிவான அரசியலை நடத்தி வருகின்றனர்.  இதுகுறித்து மாவட்டநிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சனையை சரி செய்திட வேண்டும். இல்லையென்றால் திமுகவின் தலைமையில் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் எச்சரித்தார்.