tamilnadu

img

237 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவி:  அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்

237 பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவி:  அமைச்சர் ஆர். காந்தி வழங்கினார்

ராணிப்பேட்டை,பிப்.5- ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு. சந்திரகலா தலைமையில், வாலாஜா அரசினர் மகளிர் கலைக்கல்லூரி யில் நடைபெற்ற மாபெரும் விழாவில் கைத்தறித் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்துகொண்டு நலத்திட்ட உதவி களை வழங்கினார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட 236 முகாம்களில் பெறப்பட்ட மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்ட தன் தொடர்ச்சியாக, 237 பயனாளிகளுக்கு ரூ.2.97 கோடி  மதிப்பிலான உதவிகளும், 5,894 பேருக்குப் புதிய மாதாந்திர  உதவித்தொகை ஆணைகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ் வில் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல். ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலர் செ. தனலிங்கம், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.