tamilnadu

img

மெட்ரோ திட்டம் ரத்து: ஒன்றிய பாஜக அரசை கண்டித்து நவ.20,21 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கோவை, மதுரையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டிற்கான ஜி.எஸ்.டி. நிதி பகிர்வில் பாரபட்சம், மாணவர்களின் கல்வி நிதியை ஒதுக்க மறுப்பது என தமிழ்நாட்டையும், தமிழமக்களையும் தொடர்ந்து புறக்கணித்து வரும் ஒன்றிய பாஜக அரசு தற்போது கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களையும் முடக்கி வஞ்சித்துள்ளதை கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் கோவையில் நவ.20, மதுரையில் நவ.21 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.