tamilnadu

img

மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் விவசாயிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்!

இன்று கோவை வரும் நரேந்திர மோடிக்கு எதிராக விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி கோவைக்கு வருகிறார். பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று, பிரதமர் மோடியை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.
போராட்டத்தில் பேசிய விவசாயிகள் கூறியதாவது:

  • “மரபணு மாற்றப்பட்ட விதைகளை உருவாக்க ரூ.500 கோடி ஒதுக்கி இருக்கும் பிரதமர் மோடிக்கு, இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க தார்மீக உரிமை இல்லை. மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு அனுமதி வழங்க கூடாது.
  • நதி நீர் இணைப்பில் ஒன்றிய அரசு பாரபட்சமாக நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக தென்னக நதிகளை இணைக்க எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை.
  • விவசாயப் பொருட்களுக்கு 2 மடங்கு விலை வழங்குவோம் என கூறிய பிரதமர், நெல் டன் ஒன்றுக்கு ரூ.7000 உயர்த்த வேண்டிய இடத்தில் வெறும் ரூ.3 மட்டுமே உயர்த்தியுள்ளார். எனக் கூறி கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.