குடியிருப்புகளை அகற்றமாட்டோம்! சிபிஎம் தலைவர்களிடம் மேயர் பிரியா உறுதி
சென்னை, நவ. 18 - துறைமுகம் தொகுதி, யானைக்கவுனி பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளை அகற்றமாட்டோம் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளார், துறைமுகம் தொகுதிக்குட்பட்ட யானைக்கவுனி உட்வார்ப்பு, கல்யாண புரம் பள்ளம், ஜட்காபுரம் ஆகிய குடி யிருப்பு பகுதிகளில் கணக்கெடுக்கும் நடவடிக்கையை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. மக்களிடம் அங்க அடையாளங்கள், தனிநபர் விவரங்கள் பெறப்பட்டு புகைப்படம் எடுக்கப்படுகிறது. இங்குள்ள மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துவதற்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக தெரிகிறது. தலை முறை தலைமுறையாக வசிக்கும் மக்களை எதற்காக வெளியேற்றப் போகி றார்கள்? மாற்று குடியிருப்பு எங்கே? என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட வில்லை. வெளிப்படை தன்மையற்ற கணக்கெடுக்கும் முறை ஏற்புடையதல்ல. எனவே, எதற்காக கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என்பதை வெளிப்படை யாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும். தலைமுறையாக வசிக்கும் மக்க ளுக்கு, அவரது வாழ்விடங்களிலேயே, வாழ்விட உரிமையை உறுதி செய்ய நட வடிக்கை எடுக் வேண்டும் என வலியுறுத்தி நவ.16 அன்று குடியிருப்பு பகுதிகளில் ‘வாழ்விட உரிமை நடை’ பிரச்சாரம் நடை பெற்றது. இதனை வலியுறுத்தி சிபிஎம் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் வெ.தனலட்சுமி, மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.அருள்குமார், பகுதி செயலாளர் ஆர்.குமார் மற்றும் கே.வீராசாமி, அந்தோனி ஆகியோர் செவ்வாயன்று (நவ.18) மேயர் பிரியாவை சந்தித்து மனு அளித்து பேசினர். மனுவைப் பெற்றுக் கொண்ட மேயர் ஆர்.பிரியா, உட்வார்ப்பு, கல்யாணபுரம் பள்ளம், ஜட்காபுரம் பகுதி குடியிருப்புகளை அகற்றமாட்டோம் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து புரசைவாக்கம் வட்டாட்சியர் குப்பம்மாள் ராமு-விடமும் சிபிஎம் தலைவர்கள் மனு அளித்தனர்.
