அரிய பக்கவாத பாதிப்பிலிருந்து இளைஞர் மீட்பு
சென்னை, நவ.18- மூளை, இதயம், கால் ஆகிய மூன்று உறுப்புகளில் ஒரே நேரத்தில் ஏற்பட்ட இரத்த உறைவுக் கட்டிகளால் பாதிக்கப்பட்ட 29 வயது இளைஞர் ஒருவர், சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டுள்ளார். ஏபிஎல்ஏ என்ற தன்னுடல் எதிர்ப்பு பாதிப்பு உள்ள இந்த இளைஞருக்கு 2022-ல் முதல் முறையாக பக்கவாதம் ஏற்பட்டது. மருந்துகளை குறுகிய காலம் நிறுத்தியதால் இரண்டாவது முறையாக மேலும் தீவிரமான பக்கவாதம் ஏற்பட்டது. பேச்சுக் குளறுதல் போன்ற அறிகுறிகளை கவனித்த அவர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்து வந்தார். டாக்டர் பிரபாஷ் பிரபாகரன், டாக்டர் விவேக் ஐயர், டாக்டர் ரிதேஷ் ஆர். நாயர், டாக்டர் எஸ். செல்வின் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு, காலில் அறுவை சிகிச்சை செய்தது. அதே நேரத்தில் மூளை மற்றும் இதயத்தில் உள்ள கட்டிகளைக் கரைக்க மருந்துகள் வழங்கப் பட்டன. இந்தியாவில் ஆண்டுதோறும் 16 லட்சம் பேருக்கு பக்கவாதம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குறிப்பாக 40 வயதிற்குக் குறைவானவர்களிடையே பக்கவாதம் அதிகரித்து வருவது கவலையளிக்கிறது
