tamilnadu

img

தூத்துக்குடியில் மரத்தில் கார் மோதி 3 பயிற்சி மருத்துவர்கள் பலி!

தூத்துக்குடியில் இன்று அதிகாலை மரத்தில் கார் மோதிய விபத்தில் 3 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் பயிற்சி மருத்துவர்கள் 5 பேர் இன்று அதிகாலை 3 மணியளவில், புதிய துறைமுகம் கடற்கரைக்கு கார் ஒன்றில் சென்றபோது, கனமழை காரணமாக சாலை தெளிவாக தெரியாமல் கார் கட்டுப்பாட்டை இழந்தது. பீச் ரோட்டில் சென்ற கார், அருகிலிருந்த வேப்பமரத்தில் மோதி தலைகீழாக கவிழ்ந்தது. 
இந்த விபத்தில் கோவையை சேர்ந்த சாரூபன், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல் ஜெபஸ்டியான், திருப்பத்தூரை சேர்ந்த முகிலன் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். படுகாயம் அடைந்த கிறிஸ்டிகுமார், சரண் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்துக்குறித்து போலீசார் தீவிர விசாரணி மேற்கொண்டுவருகின்றனர்.