தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டுமுறை உயர்ந்து ரூ.92,800க்கு விற்பனையாகிறது.
சென்னையில் 22 கேரட் தங்கம் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.800 கூடிய நிலையில் தற்போது மீண்டும் ரூ.800 உயர்ந்து 92,800க்கு விற்பனையாகிறது. கிராமிக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,600க்கு விற்பனையாகிறது.
அதேபோல் இன்று காலை வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ரூ.3 உயர்ந்து ரூ.176க்கு விற்பனையாகிறது.
