சென்னை:
மேற்குவங்க மாநிலத்தில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்தும், மருத்துவர்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் நாடு தழுவிய அளவில் இன்று கையிலெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் இந்திய மருத்துவச் சங்கம், தமிழகக் கிளையும் பங்கெடுத்துள்ளது.
ஜூன் 10ஆம் தேதியன்று மேற்குவங்க மாநிலத் தலைநகர் கொல் கத்தாவில் நோயாளி ஒருவரின் உறவினர்களால் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டார். இதைக் கண்டித்தும் மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், ஜூன் 14ஆம் தேதி மேற்குவங்கத்தில் 16 மருத்துவர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அனுப்பி வைத்தனர். மேற்கு வங்கத்தில் போராடும் மருத்துவர் களுக்கு ஆதரவாக மும்பை, தில்லி, ஹைதராபாத் போன்ற பல மாநகரங்களில் உள்ள மருத்து வர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மேற்குவங்கத் தில் போராடி வரும் மருத்துவர் களுக்கு ஆதரவாகவும், மருத்துவர்களுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத் தும் திங்களன்று (ஜூன் 17) நாடு
முழுவதும் மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தால் தமிழகத்தில் மருத்துவச் சேவைகள் பாதிக்கப் பட்டுள்ளன. அத்தியாவசிய மருத்துவச் சிகிச்சைகள் தவிர்த்து மற்ற அனைத்து மருத்துவச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளும் கிளி னிக்குகளும் மூடப்பட்டுள்ளன. அரசு
மருத்துவமனைகளில் மருத்து வர்கள் கருப்புப் பட்டை அணிந்து தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தால் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக் காக வந்த 500க்கும் மேற்பட்ட நோயாளி கள் திருப்பி அனுப்பப்பட்டனர். மதுரை உள்ளிட்ட இடங்களில் சில தனியார் மருத்துவமனைகள் இப்போராட்டத்தில் ஈடுபட வில்லை. சென்னையிலும் தனியார் மருத்துவமனைகள் சில வழக்கம் போல இயங்கின. நாமக்கல் அரசு மருத்துவமனை நுழைவு வாயில்
முன்பு மருத்துவர்கள் தலைக்கவ சம் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டம் செவ்வாய் காலை 6 மணி வரையில் நீடிக்கும் என்று தமிழக மருத்துவசங்கம் அறிவித்துள்ளது.இதனிடையே இப்போராட்டத் தை முடிவுக்குக் கொண்டுவர மேற்குவங்க மாநில முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என மருத்துவர்கள் அறிவித்தனர்.