tamilnadu

img

எழுத்தாளர் இமையத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சி வாழ்த்து.....

சென்னை:
சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் இமையத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக கட்சியின் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெள்ளியன்று விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி: தமிழகத்தில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் இமையம். திராவிட பாரம்பரிய குடும்ப பின்னணியிலிருந்து தமிழக எழுத்துலகிற்கு அறிமுகமான இமையம் தொடர்ச்சியாக ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்வியல் பிரச்சனைகளை சிறுகதை மற்றும் நாவல்களாக எழுதி வருகிறார். எளிய மக்களின் வாழ்க்கை நிலைகளை மிகவும் எதார்த்தமாகவும் காத்திரமாகவும் வெளிப்படுத்தும் வகையில் இவர் எழுதிய கோவேறு கழுதைகள், பெத்தவன் உள்ளிட்ட பல நூல்கள் தமிழகத்தில் பெரும் வாசகப் பரப்பை சென்றடைந்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக, மக்களின் அன்றாட பிரச்சனைகளையும் எளியமுறையில் தன்னுடைய எழுத்தால் வெளிப்படுத்தும் ஆற்றல் படைத்த எழுத்தாளர் இமையத்தின் படைப்பில், சமீபத்தில் வெளியான “செல்லாத பணம்” நாவலுக்கு மத்திய அரசின் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது கிடைத்திருக்கிறது.சாகித்ய அகாடமி விருது பெறும்எழுத்தாளர் இமையத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராட்டுதல்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, மேலும் உழைக்கும் மக்களின்வாழ்வியலோடு இணைந்த சிறந்தபல படைப்புகளை தொடர்ந்து படைத்திடவும், பல்வேறு விருதுகளை பெறவும் வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.