tamilnadu

img

சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு

சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குரூப்-1 முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 15-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதே தேதியில், சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூரப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை பல்கலைக்கழகம், வரும் 15ஆம் தேதி நடைபெற இருந்த தொலைதூரப் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மேலும், தேர்வுக்கான மாற்றுத் தேதிகள் www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.