tamilnadu

லோக் ஆயுக்தா அரசாணை ரத்து செய்யக் கோரி வழக்கு

சென்னை, ஏப்.22- தமிழகத்தில் லோக் ஆயுக்தாவுக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமன அரசாணைக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நியமனத்திற்கு முன்னதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசிக்க சட்டத்தில் வகை செய்யப்படவில்லை எனக் கூறி யோகானந்தன் என்பவர் மனுதாக்கல் செய்தார்.நியமன அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுவில் அவர் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த மனுவானது விசாரணைக்கு வந்த போது, லோக் ஆயுக்தா தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக தலைமை நீதிபதியை கலந்தாலோசிப்பது என்பது அரசின் கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது என்று தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி வழக்கை வரும் 29ஆம் தேதி ஒத்திவைத்த துடன், தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டார்.