சென்னை,டிச.29- தமிழகத்தில் இரண்டா வது கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 46 ஆயிரம் பதவி களுக்கு திங்களன்று(டிச.30) வாக்குப்பதிவு நடைபெறு கிறது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டன. இதன்படி கடந்த 27 ஆம் தேதி முதல்கட்டத் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 91 ஆயிரத்து 975 பதவிகளில் 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு முதல்கட்ட தேர்தல் நடந்து முடிந்து ள்ளது. 4 ஆயிரத்து 700 கிராம பஞ்சாயத்து தலை வர்கள், 37 ஆயிரத்து 830 பஞ்சாயத்து வார்டு உறுப்பி னர்கள், 2 ஆயிரத்து 646 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 260 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கு 4 வண்ணச் சீட்டுகளை பயன்படுத்தி முதல்கட்ட தேர்தல் நடத்தி முடிக்கப் பட்டுள்ளது. 2 ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. 46 ஆயிரத்து 639 பதவிகளை தேர்வு செய்ய இந்த வாக்குப்பதிவு நடத்தப்படு கிறது. 158 ஊராட்சி ஒன்றியங்களில் தேர்தல் நடைபெறுகிறது. 2 ஆம் கட்ட தேர்தலில் 38 ஆயிரத்து 916 பஞ்சாயத்து வார்டு உறுப்பி னர்கள், 4 ஆயிரத்து 924 பஞ்சாயத்து தலைவர்கள், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 255 மாவட்ட ஊராட்சி உறுப்பி னர்கள் ஆகிய பதவிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 5 மணிவரையில் வாக்காளர்கள் ஓட்டுப் போட லாம். 5 மணிக்கு வரிசை யில் நிற்பவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும் அவர்கள் காத்திருந்து வாக்கைப் பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். தேர்தலில் ஒரு கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்கி றார்கள். இதற்காக 25,008 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர்த்து 27 மாவட்டங்களிலும் 2 ஆம் கட்ட தேர்தலுக்கு அதிகாரி கள் தயார் நிலையில் உள்ளனர். தேர்தலையொட்டி 61 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1,551 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பதட்டமான இந்த வாக்குச் சாவடிகளில் நடை பெறும் ஓட்டுப் பதிவை அதிகாரி கள் நேரடியாக கண்காணிக்க வும் ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. முதல் கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் 315 மையங்களில் வைக்கப்பட் டுள்ளது. இன்று நடை பெறும் 2 ஆம் கட்ட தேர்தலில் பதிவாகும் வாக்குப்பெட்டிக ளும் இந்த மையங்களுக்கு இரவே கொண்டு செல்லப்படுகிறது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. துணை ராணுவப் படையினரும் பாதுகாப்புக்காக நிறுத்த ப்பட்டுள்ளனர்.