மது பாட்டில்கள் பறிமுதல்
மது பாட்டில்கள் பறிமுதல் திருவண்ணாமலை, ஜன. 17- திருவண்ணாமலை நகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட சமுத்திரம் காலனி பகுதியில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், டிஎஸ்பி மதன் தலைமையில், ஆய்வாளர் முரளிதரன் முன்னிலையில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக, மது பாட்டில்களைப் பதுக்கி வைத்திருந்த நபர்களைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
