நமது வாழ்வுரிமைக்கான புதிய அத்தியாயத்தை எழுதுவோம்!
புதுச்சேரியின் வாழ்வாதார மாக இருக்கும் ஆட்டோ ஓட்டு நர்களின் குரல் ஓயாது ஒலிக்க வேண்டும். நமது உரிமைகள் மதிக்கப் பட, நீதிக்காக நாம் அனைவரும் ஒன்றி ணைய வேண்டிய தருணம் இது! ஆட்டோ சங்கத்தின் தொடர் பங்களிப்புகள் சண்முகம் முதலமைச்சராக இருந்தபோது, முறைசாரா தொழிலா ளர்களுக்கு சமூக பாதுகாப்பு சட்டத்தை உறுதிப்படுத்த, சிஐடியு ஆட்டோ சங்கத்தின் முயற்சியால் டி. முருகன், ஆர். ராஜாங்கம், வி.பெருமாள், ஜி. சீனிவாசன் போன்ற தோழர்களின் முயற்சியால் நலச் சங்கம் அமைக்கப்பட்டது. ஆட்டோ ஓட்டுநர்களுக்கு எப்சி காலதாமதமானால், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ஒரு நாள் அபராதமாக ரூ.50 என அநியாய அப ராதம் விதித்தன. சிஐடியு ஆட்டோ சங்கம் தொடர் போராட்டங்களின் விளைவாக, உச்சநீதிமன்றம் வரை சென்று நமது வழக்கறிஞர் தோழர் கள் வாதாடி முழு அபராதத்தையும் நீக்கி, பழையபடி இருந்த கட்ட ணத்தை ஆர்டிஓ அலுவலகம் நிர்ண யம் செய்ய வைத்தனர். இந்த வெற்றி ஆட்டோக்களுக்கு மட்டு மல்லாமல், இரு சக்கரவாகனங்கள், லாரி, பேருந்து, கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தக்கூடிய வெற்றியாகும். அதுமட்டுமல்லாமல், இன்று வரை ஒட்டுமொத்த முறைசாரா தொழி லாளர் களுக்காக சிஐடியு ஆட்டோ சங்கம் தொடர்ந்து எண்ணற்ற போரா ட்டங்களை நடத்தி வருகிறது. நலச் சங்கத்தை வாரியமாக மாற்றுவ தற்காகவும் தொடர்ச்சியான போராட் டங்களை நடத்தி வருகிறது. அதன் வெளிப்பாடாகத்தான் வரும் 9 ஆம் தேதி புதுச்சேரியில் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கி றோம். ஆட்டோ ஓட்டுநர்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் எரிபொருள் விலை உயர்வு, ஆட்டோ பராமரிப்புச் செலவுகள், காப்பீட்டுக் கட்டணங்கள் (10 ஆண்டு களுக்கு முன்பு ரூ 600 ஆக இருந்தது, தற்போது ரூ. 5000- ரூ.6000), மற்றும் FC புதுப்பித்தல் கட்டண உயர்வு (ரூ.250 ஆக இருந்தது, இப்போது ரூ .1000) என அனைத்தும் நம் கழுத்தை நெரிக்கின்றன. இது நம் குடும் பங்களைக் கடும் பொருளாதார நெருக்கடியில் தள்ளிவிட்டுள்ளது. ஒரு வாகனத்திற்கு எப்சி பார்ப்ப தற்கான செலவு ரூ. 12,000- ரூ. 15,000 இலிருந்து தற்போது ரூ 45,000 வரை உயர்ந்துள்ளது. வாழ்வாதாரத்தை பறிக்கும் முயற்சி பணி நிச்சயமின்மை: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிலை யான வருமானமோ, ஓய்வூதியமோ, மருத்துவ வசதிகளோ இல்லை. போட்டி மற்றும் அநியாய விதிமுறை கள்: ஓலா, ஊபர், ரேபிடோ போன்ற ஆன்லைன் டாக்ஸி சேவைகள் மற்றும் அனுமதி இன்றி இயங்கும் இரண்டு சக்கர வாடகை நிலையங்கள் இவர் களின் வாழ்வாதாரத்தைப் பறிக் கின்றன. மறுக்கப்படும் நலத்திட்டங்கள் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் முழுமையாகச் செயல்படாத காரணத்தால் ஆட்டோ ஓட்டுநர்களுக் கான அடிப்படை உரிமைகளை மறுக் கப்படுகிறது. கோரிக்கைகள்! • நம் வாழ்வாதாரத்தைப் பாது காக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர் விரோத சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், புதிய தொழிலாளர் சட்டங் களை ரத்து செய்து, நம் அடிப்படை உரி மைகளைப் பாதுகாக்க வேண்டும். • அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை முழுமையாகச் செயல்படுத்தி, மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட நலத்திட்டங்களை முழுமை யாகச் செயல்படுத்தவேண்டும். ஓய்வூ தியம் மற்றும் குறைந்தபட்ச ஊதி யத்தை உறுதி செய்ய வேண்டும். • எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்துதல்: எரிபொருள் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மானியம் வழங்க வேண்டும். • நியாயமான விதிமுறைகள்: ஆன்லைன் டாக்சி சேவைகளுடன் நியாயமான போட்டியை உறுதி செய்யும் வகையில், ஆட்டோ ஓட்டு நர்களுக்குச் பொருத்தமான விதி முறைகளை அறிமுகப்படுத்த வேண்டும். ஜூலை 9 பந்த் போராட்டத்தில் ஏன் பங்கேற்க வேண்டும்? இது வெறும் ஒரு நாள் வேலைநிறுத்தம் அல்ல. நமது வாழ்க்கைக்கான உரிமைப் போர்! நம் உழைப்பின் கண்ணியம், நமது குழந்தைகளின் எதிர்காலம், நம் குடும்பத்தின் பாதுகாப்பு – இவை அனைத்தையும் மீட்டெடுக்கும் போரா ட்டம் இது. புதிய சட்டங்கள் நம் வாழ்வையே சூறையாட வந்திருக்கின்றன. இந்தச் சட்டங்களை எதிர்த்து நாம் ஒன்றி ணைந்து குரல் கொடுக்கவில்லை என்றால், நம் தலைவிதி இருண்டு போகும். ஒற்றுமைதான் அரசுக்கு நம் கோரிக்கைகளின் நியாயத்தையும், நம் சக்தியையும் புரியவைக்கும். இந்த பந்த் போராட்டம், 21 அம்சக் கோரிக்கைகளை அரசுக்கு உரக்கச் சொல்லும் ஒரு வாய்ப்பு. நமது நியாய மான பிரச்சனைகளை பொதுவெளி யில் எடுத்துரைத்து, நீதி கிடைக்கும் வரை ஓயாது போராடுவோம் என்ற உறுதிமொழியை அரசுக்குத் தெளிவு படுத்துவோம். நமக்குப் பின் வரும் ஆட்டோ ஓட்டுநர்கள், நாம் சந்தித்த துயரங்களைச் சந்திக்கக் கூடாது. ஒரு பாதுகாப்பான, கண்ணிய மான வாழ்வுரிமையை அவர்களுக் காக நாம் விட்டுச் செல்ல வேண்டும். இந்தப் போராட்டம், வருங்கால சந்ததி களுக்கான ஒரு முதலீடு! ஜூலை 9 அன்று, புதுச்சேரியின் வீதிகளில் நமது ஆட்டோக்களின் சத்தம் போல், நமது உரிமைக்கான குரல் வானைப் பிளக் கட்டும்! நாம் ஒன்றுபடுவோம்! நமது உரிமைகளைப் பெறுவோம்! வாருங்கள் தோழர்களே! ஜூலை 9, 2025 அன்று பந்த் போராட்டத்தில் கலந்துகொண்டு, நமது வாழ்வுரி மைக்கான புதிய அத்தியாயத்தை எழுதுவோம்!