சென்னையில் 12 வயது சிறுவனுக்கு சிறுநீரக மறு - மாற்று அறுவை சிகிச்சை
வயிற்றுப் பகுதியில் நரம்புகள் இல்லாமல்
சென்னை, மே 8- லக்னோவில் இருந்து வந்த 12 வயதான ஒரு சிறுவனுக்கு சென்னையில் சிக்கலான சிறுநீரக மறு-மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தக் சிறுவனுக்கு பிறவி யிலேயே வயிற்றுப் பகுதியில் முக்கியமான நரம்புகள் மற்றும் நரம்புத் தொடர்புகள் இல்லாமல் இருந்தது. இது வி4 நரம்பு ஒழுங்கின்மை என வகைப்படுத்தப்படும் அரி தான ஒரு ரத்தக் குழாய் கோளாறு ஆகும். இந்த சிறுவனுக்கு ஏற்கெனவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால் மாற்று உறுப்பு செயலிழந்த காரணத்தால் மறு-மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியதாயிற்று இருப்பினும், வழக்கமான நரம்பிழை வடிகால் அமைப்பு இல்லாதது இந்த அறுவை சிகிச்சைக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது என்று மூத்த சிறுநீரக நோய் நிபுணர் பேராசிரியர் சி.எம். தியாகராஜன் கூறினார். குறிப்பிடத்தக்க புது மையை வெளிப்படுத்தி, அறுவை சிகிச்சை குழு முந்தைய மாற்றுஅறுவை சிகிச்சையிலிருந்து நரம்பிழை பாதைகளை அடையாளம் கண்டு அதையே மீண்டும் பயன்படுத்தி, புதிய மாற்று உறுப்பின் பாதுகாப்பான ரத்த ஓட்டத்தை உறுதி செய்தது. இரண்டாவது மாற்று அறுவை சிகிச்சையை எளி தாக்க ஏற்கெனவே உள்ள நரம்பிழை பாதை கட்ட மைப்புகளை அவை இருந்த விதத்திலேயே பாது காத்து பழைய சிறுநீரக மாற்று உறுப்பு கவனமாக அகற்றப்பட்டது. இந்த சிறுவன் நன்றாக குண மடைந்து வருகிறார், இரத்த நாள அல்லது சிறுநீரக சிக்கல்கள் எது வும் இல்லாமல் மாற்று உறுப்பின் ஆரம்பகால செயல்பாட்டை வெளிப் படுத்துகிறார் என்று அறுவை சிகிச்சையை மேற்கொண்ட சென்னை எம்ஜிஎம் மருத்துவ மனையின் பல் உறுப்பு மாற்று சிகிச்சை மையம் தலைவர் டாக்டர் அனில் வைத்யா கூறினார். பிறக்கும் போதே குழந்தைகளுக்கு உடல் உறுப்புகளில் பிரச்சனை இருந்தால் அந்த வயதி லேயே அதற்கு தீர்வு கண்டால் குழந்தையின் உடல் எடையும் வயதுக் கேற்ப இருக்கும் என்று குழந்தைகள் சிறுநீரக நோய் நிபுணர் டாக்டர் சுகன்யா கோவிந்தன் கூறினார்.