சென்னை:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் புதிய தலைமுறை செய்தியாளராக பணியாற்றிவந்த சந்திரசேகரன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு டியூஜே இரங்கல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து டியூஜே மாநிலத் தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:
ஈரோடு மாவட்டம் கோபிச் செட்டிபாளையம், வெள்ளாங் கோவில் பகுதியைச் சார்ந்த சந்திரசேகரன் (47) புதிய தலைமுறையில் செய்தியாளராக கடந்த 10 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார்.செய்திகளை வழங்குவதில் துடிப்புடன் செயல்பட்ட முன்களப் பணியாளர் - செய்தியாளர் வி.ஈ.சந்திரசேகரன் கொரொனா நோய்த்தொற்றுக்கு பாதிக்கப் பட்டு கோபிசெட்டிப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.அங்கு தீவிர சிகிச்சை வழங்கப் பட்டது.சிகிச்சை பலனளிக்காமல் செய்தியாளர் சந்திரசேகரன் உயிரிழந்தார். கொரோனா விழிப்புணர்வுப் பணியில் முன்களப் பணியாளராக செயல்பட்ட செய்தியாளர் 47 வயது சந்திரசேகரனின் மரணம் பெரும் அதிர்ச்சியை, வேதனையைத் தருகிறது.
கடந்த சனிக்கிழமை தொடங்கி 8 நாட்களில் 6 சகோதரர்களை கோவிட் பெரும் தொற்று வாரி சுருட்டி விழிங்கி உள்ளது வேதனையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.கொரோனா பெரும் தொற்றில் உயிரிழந்த சகோதரர் சந்திரசேகரின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.செய்தியாளர் சந்திரசேகரன் குடும்பத்தினருக்கு முன்களப் பணியாளருக்கான நிவாரண நிதியை விரைந்து வழங்க தமிழக முதல்வருக்கு டியூஜே வேண்டுகோள் விடுக்கிறது.மேலும் பத்திரிகையாளர் மற்றும் குடும்பத்தினருக்கு சிறப்பு சிகிச்சை மையங்களை அமைக்கவும் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.