tamilnadu

img

திறக்கப்படுவது சிந்தனைக் கதவுகளும் தான்!

திறக்கப்படுவது சிந்தனைக் கதவுகளும் தான்!

உலகைப் புரட்டிப்போடும்  நெம்புகோல் தத்துவத்தை  தந்தவனுக்குச் சிலை   பிரபஞ்ச இருட்டுக்குள்  உண்மைகளைக் கண்டுகொள்ள  ஒளிவிளக்கு தந்தவனுக்குச் சிலை   பெற்ற பிள்ளைகளை  வறுமைக்குப் பலிகொடுத்து   ஏழைகளின் சொர்க்கத்தை  பூமியில் சமைத்திட  புதுவழி காட்டியவனுக்குச் சிலை   மனித வரலாற்றின்  வரிசைப் படிநிலையை - உயிர்  வாழ்வில் கண்டு  உலகுக்கு சொன்னவனுக்குச் சிலை  முதலாளித்துவம் இறுதியல்ல  மனிதகுலம் முன்னேறிச் செல்ல  இன்னொரு யுகம் உண்டு;  அதுவே கம்யூனிசம் என்றுரைத்து  சமதர்மத்தை முன்வைத்தவனுக்குச்   சிலை    அவன் கண்கள்          முன்னோக்கிமட்டுமல்ல  பின்னோக்கியும் பார்த்தது  அதனால் தான்  முன்னுக்குப்பின் முரணில்லா  மார்க்சியம் கிடைத்தது அந்த மார்க்சுக்கு தான் சிலை   அவன் சிந்தனை  கண்டங்களைத் தாண்டி  சென்னை வரை  வந்ததால் தானே   சென்னையில் சிலை  திறக்கப்படுவது சிலை மட்டுமல்ல  நமது சிந்தனைக்கதவுகளும் தான்    சிலை பேசாது - ஆனால்  அவன் சிந்தனைகள்  பேசப்பட்டுக்கொண்டே இருக்கும்  மனித குலம் இருக்கும் வரை - வசந்தன்