சென்னை,டிச.17- எளிய மக்களின் பிரச்சனைகளை பேசுவோம் என்று திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் கூறினார். ஜீ தமிழ்தொலைக் காட்சியில் தமிழா தமிழா என்று நிகழ்ச்சி ஒவ்வொறு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஒளிப்பரப்பாகிறது.இந்த நிகழ்சசியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு செய்தி யாளர்களிடம் பேசிய அவர், மக்கள் பிரச்சனைகளை பேசுவதால் நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பு இருக்கி றது. நிகழ்ச்சிக்கு இருதரப்பி லும் 60தேவை என்றாலும் 6ஆயிரம் பேர் பங்கேற்க விருப்பம் தெரிவிக்கி றார்கள். அவர்களில் சிறப்பாக கருத்துக்களை முன்வைப்போரை தேர்வு செய்கிறோம். இதைத்தான் பேசவேண்டும் என்று நாங்கள் எந்த கட்டுப்பாடும் விதிக்கவில்லை. அவர்க ளாகவே பேசுகிறார்கள். அதேபோல் தோற்றப்பொலிவுக்கு நாங்கள் முக்கியத்துவம் தருவதில்லை. பெண்ணோ. ஆனோ இந்த நிகழ்ச்சியில் என்ன கருத்துக்களை பேசு கிறார்கள் என்பதே முக்கியம், அதான் அழகு என்று பார்க்கிறோம். நம்ம பக்கத்து வீட்டில் உள்ள நம் அக்கா,நம்ம தங்கச்சிகளின் உரையாடல் இந்த நிகழ்ச்சி யில் எதிரொலிக்கிறது. தந்தையும் மகளும், தாயும் மகளும் பேசுத்தயங்கிற விஷயங்களை தொலை க்காட்சி பேசிவிடுகிறது. தீண்டாமை, ஆதிக்க சாதி களின் வன்மம், திருநங்கை கள், ஆண், பெண் சந்திக்கும் பிரச்சனைகள் என பலவற்றை பேசுகிறோம். உரையாடலுக்கான இடம் இருந்தால் பல பிரச்சனை களுக்கு தீர்வு கிடைத்து விடும். சாதீய ரீதியில் வன்மத்துடன் இருப்பவர்க ளிடம் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளை தெளிவாக புரிய வைக்கும் போது அவர்கள் மன மாறுகின்றனர். இதை நாங்கள் இந்த நிகழ்ச்சியின் முடிவில் நேரில் பார்த்திருக்கிறோம். அரசு போக்குவரத்து கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை, ஓய்வூதிய பலன்கள் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுடை பிள்ளைகளுக்கு குறித்த நேரத்தில் திருமணம் செய்ய முடியவில்லை. வீடு வாங்க முடியவில்லைஎன பல பிரச்சனைகளை சந்திக்கி றார்கள். இது நடத்துனர், ஓட்டுநர் பிரச்சனை மட்டும் அல்ல. இது வாழ்க்கை பிரச்சனை. சமூகத்தில் உரை யாடவேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கிறது. இப்படி பேசத் தயங்குகிற விஷயங்களை ஒரு படி மேலே பேசலாம் என்று முடிவெடுத்தோம். இதுவே இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி. குப்பை பிரச்சனை பற்றிபேச முயற்சித்தபோது இரு தரப்பிலும் பேச முன்னாள் மாநகராட்சி ஆணையர் முதல் துப்புரவு பணியாளர் வரை வந்து விட்டனர். நாங்கள் குப்பை களை தனித்தனியாக பிரித்து தாருங்கள் என்று பலமுறை சொல்லிவிட்டோம். குப்பைத்தொட்டிக்கு வெளி யேதான் போடுகிறார்கள் என்று துப்புரவுத்தொழிலாள ர்களும் போதுமான குப்பைத்தொட்டிகள் இல்லை என்று பொது மக்களும் கருத்துக்களை தெரிவித்தனர். இப்படி பலவிஷயங்களை நாங்கள் தொடர்ந்து தமிழா தமிழா நிகழ்ச்சியில் பேசுவோம் என்றார் கரு. பழனியப்பன்.