சென்னை:
கோவையில் 10 வயது சிறுமி மற்றும் 7-வயது சிறுவனைகடத்திப் படுகொலை செய்தனர். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் வாடகை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவரும் அவரது நண்பன் மனோகரனும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது போலீஸ் காவலிலிருந்து தப்பிக்க முயன்ற மோகன்ராஜை போலீசார் சுட்டுக் கொன்றனர். குற்றவாளி யான மனோகரனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து உத்தரவிட்டது.இந்நிலையில் ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனையை நிறைவேற்ற உத்தரவு என மனோகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் 4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.