ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேசுவரம் தீவையும் பாம்பன் பகுதியையும் இணைக்கும் வகையில் 2.3 கிலோமீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பாலம், சேதமடைந்ததால் 2022 முதல் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதன் அருகே ரூ.250 கோடி செலவில், 2.07 கிலோமீட்டர் நீளத்தில் ‘லிப்ட்’ வகை தூக்கு ரயில் பாலம் கட்டும் பணி 2020-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு சமீபத்தில் திறப்புவிழா நடைபெற்றது.
இந்நிலையில், 110 ஆண்டுகள் பழமைவாய்ந்த பாம்பன் பாலத்தை அகற்ற ரூ.2.81 கோடிக்கு டெண்டர் கோரியுள்ளது. மேலும், 4 மாதங்களில் அகற்றும் பணிகள் முடிக்கப்படும் என டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.