சென்னை,ஆக. 17- இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சார்பில் ஊரகப்பகுதி இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுவதாக நிறுவனத்தின் தென் மண்டல செயல் இயக்குநர் அருப் சின்ஹா கூறினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனில் சுதந்திர தினத்தன்று கொடியேற்றி உரையாற்றிய அவர்,இதனால் ஊரகப்பகுதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலையை நிறுவனம் உருவாக்கியுள்ளது என்றார். தொழில்பழகுநர் பயிற்சி மற்றும் திறன் வளர்த்தல் திட்டத்தை தொடங்கியிருப்பதாகவும் இதன் மூலம் ஆண்டு தோறும் நாடு முழுவதும் 2ஆயிரம் தொழில் மற்றும் தொழில்நுட்ப பழகுநர்கள் திறன் உள்ளவர்களாக உருவாக்கப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் இந்தியன் ஆயில் நிறுவனம் கழிப்பறை வசதிகளை செய்து தருகிறது என்றும் சின்ஹா தெரிவித்தார். இந்த விழாவில் கல்வியில் சிறப்பாக சாதனை புரிந்த இந்தியன் வங்கி ஊழியர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.