tamilnadu

img

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக இன்று முக்கிய ஆலோசனை... 

சென்னை
தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2வது அலை இன்னும் முழுமையாக குறையவில்லை. இன்னும் தினசரி பாதிப்பு 4 ஆயிரத்துக்கு மேல் தான் உள்ளது. குறிப்பாக 16 மாவட்டங்களில் இறங்குவரிசையில் இருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் ஏறுவரிசையில் ஏறியுள்ளது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.  


இந்நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 5-ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  இன்று மருத்துவ நிபுணர்கள், சுகாதாரத்துறை மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நட்த்துகிறார். இந்த ஆலோசனை கூட்டம்  இன்று காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.