tamilnadu

img

ஏப்.11 முக்கிய ஆலோசனை

நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் விவாதித்தார் பிரதமர்

புதுதில்லி, ஏப்.8- உலகையே அச்சுறுத்தி வருகின்ற கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை கள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அர சியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மார்ச் 8 புதனன்று ஆலோசனை நடத்தி னார்.  கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று உலக சுகா தார அமைப்பு வலியுறுத்தி வருகிறது. இதனால் 40- க்கும் மேற்பட்ட நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் நாடு முழுவதும் 21 நாட் கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 5,194 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. ஊரடங்கை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. 

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலை வர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் புதனன்று ஆலோ சனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநி லங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுதீப் பந்தோபாத்யாயா, சிவசேனா சார் பில் சஞ்சய் ரவத், சமாஜ்வாதி கட்சி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் எஸ்.சி.மிஸ்ரா, லோக் ஜனசக்தி சார்பில் சிராக் பாஸ்வான், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கொரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனை களை பிரதமர் மோடி கோரினார்.  ஏற்கெனவே மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவத்துறை யினர், தொலைக்காட்சி, பத்திரிகை ஆசி ரியர்கள் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடினார். 

எளமரம் கரீம் பேச்சு

திருவனந்தபுரத்திலிருந்து காணொலி மூலம் இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் எளமரம் கரீம், கொரோனா பாதிப்பு ஊரடங்கினையொட்டி நாடு முழுவதும் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார துயரங்களுக்கு தீர்வு காண்பது, கொரோனா பராமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை விரிவு படுத்துவது, ஊரடங்கு முடிந்தவுடன் ஏற்படக் கூடிய பல்வேறு பிரச்சனை களை முன்கூட்டியே ஆய்வு செய்து திறம்பட எதிர்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வது மற்றும் கேரளத்தில் தற்போதைய நிலைமையும், அதை சமா ளிக்க தேவையான உதவிகளும் என நான்கு அம்சங்களை விரிவாக முன் வைத்தார். 

கொரோனா பரவுவதை தடுத்து நிறுத்துவதற்காக மத்திய அரசு மேற் கொள்ளும் பல்வேறு நடவடிக்கை களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது ஆதரவினை தெரிவிக்கிறது என்று குறிப்பிட்ட அவர், இந்த தருணத்தில் கொரோனா பரவலை தடுக்க ஒன்று பட்டு செயல்படுவோம் என்றும், தற்போ தைய நிலையை அரசியல் வேறுபாடு கள் இன்றி ஒன்றிணைந்து எதிர்கொண்டு துயரத்தை முறியடிக்க நம்மால் முடியும் என்றும் எளமரம் கரீம் நம்பிக்கை தெரிவித்தார்.

அதேவேளையில், கொரோனாவை தடுக்க ஊரடங்கு தேவைதான் என்ற போதிலும், அதை திடீரென அறிவித்தது பல கடினமான நிலைமைகளை உரு வாக்கியிருக்கிறது என்று சுட்டிக்காட்டிய எளமரம் கரீம், இந்த நிலைமையை சரி செய்ய அரசு உடனடியாக ஊரடங்கு காலத்திலும், ஊரடங்கு முடிந்த பின்பும் எழுகின்ற நெருக்கடிகளை முன்கூட் டியே ஆய்வு செய்து பொருத்தமான நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண் டும் என்றும் வலியுறுத்தினார்.

ஏப்.11-இல் முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை

இக்கூட்டத்தில் பிரதமர் மோடி தெரி விக்கையில், கொரோனா பரவலைத் தடுக்க, பல்வேறு மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள், பல்வேறு துறை களின் நிபுணர்கள், ஊரடங்கை நீட்டிக்கு மாறு பரிந்துரைத்துள்ளன.  ஏற்கனவே மருத்துவ அவசர நிலையில் உள்ள நாட் டின் தற்போதைய நிலைமை என்பது, சமூக அவசர நிலைக்கு ஒத்ததாகும். இதன்மூலம், கொரோனாவுக்கு எதி ரான தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியது அவசியமாகியி ருக்கின்றன. கொரோனா தொற்று நோயால் அனைத்துலக நாடுகளும் கடு மையான சவாலை எதிர்கொண்டுள் ளன. தற்போதைய நிலைமை, மனித குல வரலாற்றில், ஒரு சகாப்தத்தையே மாற்றியமைக்க கூடிய அளவிற்கான அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. மனித குல வரலாற்றுக்கே அச்சுறுத்த லாக உருவெடுத்திருக்கும் கொரோனா வை எதிர்த்து, அனைவரும் ஒன்றி ணைந்து போராட வேண்டியுள்ளது.   கொரோனா பெருந்தொற்றை எதிர்த்துப் போராடும் பணியில், மத்திய அரசுடன் இணைந்து, மாநில அரசுகள் சிறப்பாக பணியாற்றுகின்றன என்று தெரிவித் தார். 

இதனிடையே, அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும், பிரதமர் நரேந் திர மோடி ஏப்ரல் 11 ஆம் தேதியன்று காணொலி காட்சி மூலம் முக்கிய ஆலோ சனை நடத்த உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது.இக்கூட்டத்திற்கு பிறகே ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடி வெடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.