சென்னை, ஜூலை 14- தேனாம்பேட்டை திரு.வி.க. குடிசைமாற்று வாரிய குடியிருப்பை இடித்து விட்டு, புதிதாக கட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இந்த வாரிய குடியிருப்பு கட்டி சுமார் 40 வருடமாகி றது. இங்குள்ள ‘கியூ’ பிளாக்கில் அமைக்கப்பட்டி ருந்த குப்பைபோடும் பகுதி யின் மூன்றுதளமும் கடந்த 10ந் தேதி இடிந்து விழுந்தது. கட்டிடம் முழுமையிலும் விரிசல் ஏற்பட்டு பலவீன மடைந்துள்ளது. ஓ, பி, கியூ, ஆர், எஸ் அடுக்குமாடி குடி யிருப்புக்கு அருகில், தனி யார் கட்டுமானத்திற்காக அதிக ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. இதுவும் கட்டிடம் இடிந்து விழ காரண மாக இருந்துள்ளது. ஆர்.பிளாக்கில் தரை தளம் முதல் 3வது தளம் வரை குப்பை போடும் பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதி யும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே, ஓ, பி, கியூ, ஆர் பிளாக்குகளில் உரிய ஆய்வு செய்து அவற்றை செப்பனிட வேண்டும். சுவர்களில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். 40 ஆண்டுகள் கடந்த இந்த கட்டிடங்களை இடித்துவிட்டு புதியதாக குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலி யுறுத்தி உள்ளது. இது தொடர்பாக தேனாம் பேட்டையில் உள்ள குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறி யாளர் சந்திரமோகனிடம், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயற் குழு உறுப்பினர் எஸ்.கே. முருகேஷ், ஆயிரம் விளக்கு பகுதிகுழு உறுப்பினர் வெ. இரவீந்திரபாரதி மற்றும் சு.அம்பிகாபதி ஆகியோர் மனு அளித்தனர்.