tamilnadu

ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராவேன்: பன்னீர்செல்வம்

 சென்னை, ஜூலை 4 - முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும்  ஆறுமுகசாமி ஆணை யத்தில் ஆஜராகி எனக்கு தெரிந்த உண்மைகளை தெரிவிப்பேன் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். பேரவையில் வியாழ னன்று (ஜூலை 4) மின்துறை  மானியம் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற விவாதத்தில் எதிர்க்கட்சித்  தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விக்கு பதி லளித்த ஓ.பன்னீர்செல்வம், ஆறுமுகசாமி ஆணையம் 4  முறை அழைப்பாணை அனுப்பியது. 2 முறை பணிச்சுமை காரணமாக ஆஜ ராகமுடியவில்லை. 2முறை  ஆணையமே விசார ணையை ஒத்திவைத்தது. ஆணையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளது. அந்த வழக்கு விசா ரணை முடிந்த பிறகு, ஆணை யம் தொடர்ந்து செயல்படும். அப்போது அழைப்பாணை அனுப்பினால் ஆஜராவேன் என்றார்.