மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஓசூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சத்யாவுக்கு உதயசூரியன் சின்னத்திலும், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவர்.ஏ, செல்லகுமாருக்கு கை சின்னத்திலும் வாக்குகள் கோரி ஓசூர்அசோக் லே லண்டு மார்க்சிஸ்ட் கட்சி, சிஐடியு சார்பில் சாந்தி நகர், ரயில்வே ஸ்டேசன், முனீஷ்வர் நகர், ஏஎஸ்டிசி குடியிருப்பு காலனி பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.
விழுப்புரம்(தனி) மக்களவைத் தொகுதி மதச் சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ரவிக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு விக்கிரவாண்டி மேற்கு ஒன்றியக்குழு சார்பில் செயலாளர் ஆர்.தண்டபானி தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராமமூர்த்தி, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். டி.முருகன், கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.கிஷ்ணராஜ், பி.கலியமூர்த்தி, எஸ்..ரமேஷ் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் துரை.ரவிக்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கோரி திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளர் டி.ஏழுமலை தலைமையில் கூட்டணிக் கட்சியினருடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அரக்கோணம் மக்களவை தொகுதி மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ். ஜெகத்ரட்சகனை ஆதரித்து காட்பாடி தாலுகா செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடந்த பிரச்சாரத்தில்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி, செந்தாமரை உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.