சென்னை, நவ.14- சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக 48 மணி நேரத்தில் பலத்த மழைபெய்ய வாய்ப்பு இருப்ப தாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த மாதம் தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வரு கிறது. அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக மழை பெய்து வந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு புய லாக மாறி தமிழகத்தை விட்டு நகர்ந்து சென்றது. இதனால் கடந்த சில நாட்களாக மழை யின்றி வறண்ட வானிலை காணப் பட்டது. காற்று சுழற்சி, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி என எதுவும் உரு வாகாததால் மழையின் அறிகுறி இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் வங்கக் கடலில் காற்று சுழற்சி உருவாகி வருகிறது. இத னால் மழை வாய்ப்பு அதிக ரித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறி வித்திருப்பது வருமாறு:- தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வங்கக் கடலில் உரு வாக உள்ள காற்று சுழற்சி காரண மாக, அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மித மான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி, தூத்துக் குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவ கங்கை, புதுக்கோட்டை, தஞ்சா வூர், திருவாரூர், நாகை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென் னையை பொறுத்த வரை வெப்பச் சலனம் காரணமாக 48 மணி நேரத் தில் பலத்த மழைபெய்யவும் வாய்ப்புண்டு. இவ்வாறு அவர் கூறினார்.