tamilnadu

வைகோவை விடுவிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

 சென்னை,ஜூன் 20- அவதூறு வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி வைகோ தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய பிரத மர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி யிருந்தார். அதில் மதிமுகவை உடைக்க  திமுக தலைவர் கருணாநிதி (அப்போதைய  முதல்வர்) முயற்சி செய்ததாக கூறியிருந் தார். இந்த கடிதத்தின் அடிப்படையில் தமி ழக அரசு சார்பில் வைகோ மீது நீதிமன்றத்  தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வைகோ மனு தாக்கல்  செய்தார். இந்த மனு மீதான விசாரணை முடி வடைந்த நிலையில், மனுவை நீதிபதி வியா ழனன்று (ஜூன்20) தள்ளுபடி செய்தார். அதேசமயம், பாரதிராஜா அலுவலகம் தாக்  கப்பட்டதற்கு கருணாநிதி தான் காரணம் என பேசியது தொடர்பான வழக்கில் இருந்து  வைகோ விடுவிக்கப்பட்டார்.