tamilnadu

நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட முடியாது உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை,ஆக.13- மருத்துவப்படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு  அளிக்கும்படி சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட 2 மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  ஏற்கனவே இந்த வழக்கு விசாரணையின் போது, இரு மசோதாக்களும் திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும், அதை தமிழக அரசு பெற்றுக் கொண்டு விட்டதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, எந்த காரணங்களும் தெரிவிக்கா மல், மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்ட தால், நடைமுறை நிறைவடையவில்லை என கருத வேண்டியுள்ளதாகவும், அதனால் இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. தமிழக அரசு தரப்பில்  ஆஜரான தலைமை வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு, நீண்ட விவாதமும் நடத்தப் பட்டதாக தெரிவித்தார். மசோதாக்களை திருப்பி அனுப்பிய தற்கான காரணங்களை தெரிவிக்கும் படி  மத்திய அரசுக்கு 2017 அக்டோபர் 25 ஆம் தேதி முதல் கடந்த மே 5 ம் தேதி வரை 11 கடிதங்களை தமிழக அரசு அனுப்பி யிருப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கை பொறுத்தவரை மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பதால், மசோதாவுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்கும் படி உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மசோதாவை திருப்பி அனுப்பிய விவகாரத்தில் நடைமுறை பின்பற்றவில்லை என்றால், தனி வழக்காக மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்று நீதிபதிகள் தெரி வித்து, வழக்கை முடித்து வைத்தனர்.