சென்னை:
தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளி சிப்பிப் பாறை நாயை ஏலம் விட தடை விதிக்க மறுத்த உயர் நீதிமன்றம், நாயை ஏலத்தில் எடுப்பவர் மனிதாபிமானத்துடன் பராமரிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் ஆன்டனி கிளமன்ரூபன் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், தமிழ்நாடு கமாண்டோ பயிற்சிப் பள்ளியில் மோப்பநாய் பயிற்சிக் காக சிப்பிப்பாறை நாய் பயன் படுத்தப்பட்டு வருகிறது.அதற்காக வாங்கப்பட்ட சிப்பிப்பாறை நாய் ஒன்றுக்கு முறையாக பயிற்சி அளிக்க முடியவில்லை. எனவே, அந்த நாயை விற்க ஏல அறிவிப்பு விடப்பட்டுள்ளது. இதுபோன்ற ஏலத்தில் நாயை வாங்குபவர்கள் அந்த நாயை முறையாக பராமரிக்கமாட்டார்கள். எனவே பாரம்பரிய நாட்டு வகை நாயான சிப்பிப்பாறை நாயை தவறான இனப்பெருக்கத்துக்கு பயன்படுத்துவார்கள் என கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற் றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏலத்துக்கு தடை விதிக்க முடியாது என மறுத்து விட்டனர். ஏலம் எடுப்பவர்கள் அந்த நாய்க்கு முறையான வசதிகளை செய்து தர வேண்டும். நாயை மனிதாபிமானத் துடன் பராமரிக்க வேண்டுமென நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள் ளனர்.