தமிழ்நாடு ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
அரசியலமைப்பு சாசனத்தையும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார்.
ஆகவே ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புறக்கணிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.