districts

img

உதவித்தொகையை உயர்த்தக்கோரி மாற்றுத்திறனாளிகள் சிறை நிரப்பும் போராட்டம்

மயிலாடுதுறை, ஜன-23-  மயிலாடுதுறை, சீர்காழி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.6,000, கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10,000, படுக்கையில் வாழ்ந்து வரும் நபருக்கு ரூ.15,000 உதவித் தொகையை உயர்த்தி வழங்கிட வலியுறுத்தி சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது.  மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் வட்டத்தலைவர் யூ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் டி. கணேசன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ப. மாரியப்பன் மற்றும் சங்க நிர்வாகிகள் போராட்டத்தை விளக்கி உரையாற்றினர். சீர்காழி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு சங்க பொறுப்பாளர்கள் முருகன், உத்திராபதி, குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டச் செயலாளர் புருஷோத்தமன் மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தை விளக்கி உரையாற்றினர்.  மயிலாடுதுறை, சீர்காழி இரு பகுதிகளிலும் நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டு கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.