கூத்தாநல்லூர், ஜன.23- பள்ளிக் கல்வித்துறை மற்றும் பொது நூலக துறையின் சார்பில் 3 ஆவது புத்தகத் திருவிழா, ஜன.24 முதல் பிப்.2 வரை திருவாரூரில் நடைபெறவுள்ளது. இப்புத்தகப் திருவிழாவைப் பற்றிய பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு மாணவர்கள் பேரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலிருந்து புறப்பட்டு, நகராட்சி அலுவலகம் முன்பு முடிவடைந்தது. அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட இப்பேரணிக்கு, கூத்தாநல்லூர் நகர்மன்றத் தலைவர் ஹஜ்ஜா பாத்திமா பஷீரா தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் செல்வி கிருத்திகா ஜோதி முன்னிலை வகித்தார். இப்பேரணியில், நகர்மன்ற, துணை நகர்மன்ற உறுப்பினர்களும், நாகராட்சி ஊழியர்களும், கூத்தாநல்லூர் பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.