ஓய்வுபெறும் நாளில் அரசுப் பணியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யும் நடைமுறை தவிர்க்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுருந்தார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அரசாணையில், தவறு செய்யும் அரசு ஊழியர்களைத் தடுக்கவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், சில சமயங்களில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாள் வரை நடவடிக்கைகள் நீட்டிக்கப்பட்டு இழுத்தடிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த அதிகாரி நிலைமையை மதிப்பிட்டு, அரசு ஊழியர்கள் மீது நிலுவையில் உள்ள குற்றச்சாட்டுகள், பணியிடை நீக்கம் செய்யும் அளவுக்கு தீவிரமானவையா என்பதை உறுதிப்படுத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.