வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து 4வது நாளாக இன்றும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
சென்னை தியாகராய நகரில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்த முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியபோது, கொட்டும் மழையில் ஆய்வு செய்வது எனக்கு புதிதல்ல. நான் மேயராக இருந்தபோது செய்திருக்கிறேன், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோதும் துணை முதலமைச்சராக இருந்தபோதும் செய்துள்ளேன். இந்த 10 வருடத்தில் கடந்த ஆட்சியில் எதுவுமே செய்யாத காரணத்தால்தான், மழைபெய்து எங்கெல்லாம் அடைப்பு வரும் என்று முன்னதாகவே தெரிந்து வைத்து அதையெல்லாம் சரிசெய்து கொண்டிருக்கிறோம். இந்த மழைக்காலம் முடிந்தவுடன் நிரந்தரமாக, சேதாரம் இல்லாத சென்னையாக மாற்றுவோம். மழைக்காலங்களில் நோய் பரவாமல் இருக்க, முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களுக்குக் கூட மருத்துவ முகாம்கள் அமைத்து, மருத்துவர்களை நியமித்து அந்தப் பணியும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.