சென்னை:
தமிழகத்தில் பதவி உயர்வு அடிப்படையில் காலியாகவுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடங்களை சுட்டிக்காட்டி, 2020-21 ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இதில் 43 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு விரைவில் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளது. அதில் 4 டிஜிபி பணியிடங்கள் நிரப்ப அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால் விதிப்படி 3 டிஜிபி பணியிடங்களை மட்டும்நிரப்ப மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதியளித்துள் ளது. பிப்ரவரி 14 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம்பிறப்பித்த உத்தரவில், 43 இடங்களை நிரப்ப அனுமதிவழங்கியுள்ளது. இதுகுறித்து தலைமைசெயலகத்தில் உள்துறை செயலாளர் பிரபாகரன் நடத்திய ஆலோசனை யில் 43 பேருக்கும் பதவி உயர்வு, ஒதுக்க வேண்டிய பணி யிடங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.