tamilnadu

img

காபி ஹவுஸ் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் பொதுமேலாளர்

காபி ஹவுஸ் தொழிலாளர்களுக்கு  எதிராக செயல்படும் பொதுமேலாளர்

புதுச்சேரியில் சிஐடியு ஆர்ப்பாட்டம்

துச்சேரி, மே8- காபி ஹவுஸ் தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் பொது மேலாளர் இளங்கோவனை கண்டித்து சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தியன் காபி ஹவுஸ்  கூட்டுறவு நிறுவனத்தின் சார்பில் புதுச்சேரி மற்றும் தமிழகம் பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் சிற்றுண்டி தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு  இந்த காபி ஹவுஸ் கூட்டுறவு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. 3 ஆண்டுக்கு ஒரு முறை காபி ஹவுஸ் நிறுவனத்தை வழி நடத்த பிரதிநிதித்துவ தேர்தலில் சிஐடியு சங்கம் மட்டுமே தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகிறது.  இந்நிறுவனத்திற்கு கூட்டுறவுத்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பொது மேலாளர் எஸ்.பி. இளங்கோவன் தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராகவும், சிஐடியு பிரதிநிதிகள் எடுக்கும் முடிவுக்கு ஒப்புதல் தர மறுப்பதோடு, மாற்று தொழிற்சங்க பிரதிநிதிகள் தூண்டுவதோடு நிறுவனம் நலிவடைவதற்காகவே செயல்பட்டு வரு கிறார். இதற்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி நேரு வீதி, காந்தி வீதி சந்திப்பில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு இந்தியன் காபி ஹவுஸ் தொழிலாளர் சங்கத்தின் செயல் தலைவர் என். கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் ஆர். ராஜாங்கம், சிஐடியு மாநிலச் செயலாளர் சீனுவாசன், மாநிலத் தலைவர் பிரபுராஜ், காபி ஹவுஸ் தொழிலாளர் சங்க துணைத் தலைவர் ராமச்சந்திரன், ஆகியோர் கண்டன உரை யாற்றினார். சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன்,  சுரேந்திரன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.