tamilnadu

எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனே நிறுத்துக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை,மே 19-நாகை மாவட்டத்தில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின்மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கேட்டுக் கொண்டுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:நாகை மாவட்டம் சீர்காழி வட்டம்மாதானம் பகுதியிலிருந்து தரங்கம்பாடி வட்டம் மேமாத்தூர் கிராமத்தில்இயற்கை எரிவாயுவை குழாய் வழியாக கொண்டு வந்து சேமிக்கும்திட்டத்தை கெயில் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் அவர்களின் ஒப்புதல் இல்லாமல் நெல், பருத்தி உள்ளிட்ட பயிர்களை அழித்து குழாய் பதிக்கும் பணியில் கெயில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இச் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இரணியன்உள்ளிட்ட எட்டு பேர் மீது பிணையில் வெளிவர முடியாத கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுகாவல்துறை விவசாயிகளை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.ஏற்கனவே, கொச்சியிலிருந்து மங்களூர் வரை விவசாய விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் பதிப்பதை அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் மாற்றுவழியில் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றும், போட்ட குழாய்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டார். இதுவரை அத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. அம்மாவின் ஆட்சி என்று நொடிக்கொரு தரம் கூறிக் கொள்ளும் எடப்பாடி ஆட்சி மத்திய அரசின் எடுபிடி ஆட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் காவல்துறையை ஏவி திட்டத்தை செயல்படுத்தும் கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. விவசாயிகளிடம் கருத்துக் கேட்காமல் இப்படிப்பட்ட திட்டங்களை செயல்படுத்துவது சட்டவிரோதம் என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.எனவே, தமிழக அரசு எரிவாயு குழாய் பதிக்கும் இத்திட்டப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். சிறையிலடைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்வதுடன் பொய்வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். அழிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகளின் விருப்பத்திற்கு விரோதமாக எக்காரணத்தைக் கொண்டும் குழாய் பதிப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, இது குறித்துமுத்தரப்பு கூட்டத்தை நடத்தி தீர்வு காண அரசு முன்வர வேண்டும். தமிழகவிவசாயிகளின் நலன்களைப் பற்றி கவலைப்படாமல், மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும் தமிழக அரசுக்கு எதிராக அனைத்து விவசாயிகளும் ஒன்றுபட்டு குரலெழுப்புமாறு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.