மலைப்பாதைகளில் மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லாமல் பயணிக்கும் திட்டத்திற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
தமிழ்நாட்டு மலைப்பகுதியில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா விடியல் பயணத் திட்டம், மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவுப்படுத்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மற்றும் அவருடன் வரும் ஒரு துணையாளர் சாதாரண கட்டண அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். என சுதந்திர தின உரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசிய நிலையில் இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.