ஓசூர், மே 20-அசோக் லே லண்டு ஓய்வு பெற்ற பணியாளர்கள் நல சங்கமும் ஓசூர் காவேரி மருத்துவ மனையும் இணைந்து நடத்திய இலவச முழு உடல் மருத்துவப் பரிசோதனை முகாம் இரு நாட்கள் நடைபெற்றது. முகாமை நிறுவன இயக்குனர் மருத்துவர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.அரவிந்தன், நாகேஷ் குமார் உள்ளிட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைபணியாளர்கள் முழு உடல் பரிசோதனையில் ஈடுபட்டனர். ரத்தம், சிறுநீர், சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், தைராய்டு, கல்லீரல், இதயம், துறையீரல், கண், பல், இலவசமாக பரிசோதனைகள் செய்யப்பட்டு ஆலோசனைகளும், வழங்கப்பட்டது. தேவைப்படுபவர்களுக்கு, குறைந்த செலவில் மருத்துவமும், அறுவை சிகிச்சைகளும் செய்யப் பட்டது.இந்த முகாமில் ஓசூர் அசோக் லே லண்டு பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களும் அவர்களின் துணைவியர்களும் 400-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.சேவை மனப்பான்மையுடன் இந்த முகாமை இலவசமாக இரு நாட்கள் நடத்தியதற்காக பணி ஓய்வு பெற்றோர் நலச் சங்கம் சார்பில் தலைவர் துரை, செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் ராஜூ, கிருஷ்ண தாஸ், சிவராமன், சின்னசாமி, சகாயராஜ், பொன்னுசாமி, பாண்டுரங்கன், உள்ளிட்ட நிர்வாகிகள் ஓசூர் காவேரி மருத்துவமனை நிர்வாகத்திற்கு பாராட்டு தெரிவித்தனர்.