tamilnadu

img

புதிதாக நான்கு தொழிற்பேட்டைகள்: அமைச்சர்....

சென்னை:
தமிழ்நாட்டின் அனைத்து பகுதியிலும் சீரான தொழில் வளர்ச்சி ஏற்படுத்த ரூபாய் 210 கோடியில் புதிதாக நான்கு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்தார்.

சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் தா.மோ. அன்பரசன்,”நீலகிரி மாவட்டத்தில் உள்ள 10 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் கடன் உதவியுடன் 50 கோடி செலவில் நவீன மயமாக்கப்படும்” என்றார்.

சிற்பக்கலை தொழில் பூங்கா
செங்கல்பட்டு மாவட்டம் கடம்பாடி கிராமத்தில் 19 ஏக்கர் நிலப்பரப்பில் ரூபாய் 23 கோடி திட்ட மதிப்பில் சிற்பக் கலைஞர்களின் மேம்பாட்டிற்காக தொழில் பூங்கா ஒன்று அமைத்துக் கொடுக்கப்படும் இதில் 100 சிற்பக் கலைஞர்கள் மற்றும் இதர ஆயிரம் தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.கோவை மாவட்டம் கிட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையில் நேரடியாக பத்தாயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்க சங்க உறுப்பினர்களின் பங்களிப்புடன் ரூபாய் பதினேழு கோடி செலவில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பாட்டிற்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும் என்றும் கோவை மாவட்டம் வெள்ளலூர் மதுக்கரை மற்றும் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஆகிய 3 இடங்களில் அரசின் மானியத்துடன் பொது உற்பத்தி உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் எனவும் கூறினார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை, திருவள்ளூர் மாவட்டம் காவேரிராஜபுரம், செங்கல்பட்டு மாவட்டம் கொடூர், மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் ஆகிய நான்கு இடங்களில் மொத்தமாக 394 ஏக்கரில் ரூபாய் 118 கோடி செலவில் புதிதாக நான்கு தொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்றும்இதன் மூலம் சுமார் 7,000 தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றும் அமைச்சர் அன்பரசன் கூறினார்.