districts

img

சென்னையில் 27,138 அடுக்குமாடி குடியிருப்புகள் வாழ தகுதியற்றவை: அமைச்சர் தா.மோ. அன்பரசன்

சென்னை,நவ.23- சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாதரிப் பேட்டை,  நாவலர்நெடுஞ்செழியன் நகர்,  கொய்யாதோப்பு மற்றும் காக்ஸ் காலனியில்  பழைய குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கள் அகற்றப்பட்டு தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மறுகட்டுமானம் செய்யப்பட உள்ளது. இந்த குடியிருப்புகளில் வசிக்கும் 392 குடியிருப்புதாரர்களுக்கு கருணைத் தொகையாக ரூ.94.08 லட்சம் காசோலை களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் வாரிய வீடுகள் கட்டப்பட்டு இக்குடியிருப்புகள் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் ஆவதால்   பழுதாகி உள்ளன.  இவற்றை இடித்துவிட்டு புதிய குடியிருப்பு கள் கட்டித்தரப்படவேண்டும் என அப்பகுதி மக்கள்  கோரிக்கை விடுத்தனர்.  அக்கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழுதடைந்த வீடுகளை ஆய்வு செய்ய குழு ஒன்றை நியமித்தார்.  அக்குழுவின் ஆய்வின் அடிப்படையில் சென்னையில் மட்டும் 27,138 அடுக்கு மாடி குடியிருப்புகளும் , இதர பகுதிகளில்  3354 வீடுகளும் மக்கள் வாழத்தகுதியற்ற  வீடுகளாக உள்ளதாக கண்டறியப்பட் டுள்ளது.  நிதி நிலை அறிக்கையில் அறிவித்த படி இக்குடியிருப்புகளை மறு கட்டுமானம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.1200  கோடியில் 7500 வீடுகளும், நடப்பாண்டு ரூ.1200 கோடியில் 7500 வீடுகளும் ஆக  மொத்தம்ரூ.2400 கோடி மதிப்பீட்டில் 15000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப் படவுள்ளது.  

ஏற்கனவே எங்கெல்லாம் வீடுகள் இடிக்கப்படுகின்றதோ அந்த பகுதியில் மீண்டும் அதே மக்களுக்கு வீடு கள் ஒதுக்கீடு செய்ய முதலமைச்சர்   உத்தரவிட்டுள்ளார். இக்குடியிருப்பு தாரர்களுக்கு மறுகட்டுமான காலங்களில் வெளியே வாடகையில் தங்குவதற்காக வழங்கப்பட்டு வந்த கருணைத் தொகை ரூ.8ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.  அதனடிப்படையில் இன்றைய தினம் 392 குடும்பங்களுக்கு தலா ரூ.24,000வீதம் ரூ.94.08 லட்சம் காசோலையாக வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 200 மற்றும் 300 சதுர அடியில் இருந்தகுடியிருப்புகளில் பொதுமக்கள் சிரமப்பட்டு வசித்து வந்தனர். அது தற்போது 400 சதுர அடியாக மாற்றப்பட்டுள்ளது. கட்டிடத்தின் தரத்தினை உறுதி செய்ய  3-ஆம் தரப்பு வல்லுநர் குழு அமைக்கப் பட்டுள்ளது. குடியிருப்புதார்கள் விரைவில் இக்குடியிருப்புகளை காலி செய்யும் பட்சத்தில் புதிய குடியிருப்புகளின்கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு அந்த பணி களை தொடர்ந்து ஆய்வு செய்து, 18 மாதத்திற் குள் கட்டித் தரப்படும் என்றார் அமைச்சர். இந்நிகழ்ச்சியில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன்,  வாரிய இணை மேலாண்மை இயக்குநர். மீ.தங்கவேல், சென்னை மாநகராட்சி பணி கள் குழு தலைவர்  சிற்றரசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.