சென்னை:
இணைய வழியில் ஆண்ட் ராய்டு செயலி மூலம் அறிவியல் விழிப்புணர்வு திறனறிதல் தேர்வில் பள்ளி மாணவர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்தியரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்சிஇஆர்டி இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது. மாணாக்கர்களிடம் அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதோடு, அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டில் கரோனா பேரிடரால் பள்ளிகள் திறக்காமல் இருப்பதால் வீட்டில் இருந்தே இத்தேர்வை மாணவர்களை எழுதவைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது. இத்தேர்வு இந்தியா முழுவதும் 29-11-2020 (ஞாயிறு) மற்றும் 30-11-2020 (திங்கள்) ஆகிய இரு நாட்கள் இணையவழியில் நடைபெற உள்ளது. ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் தேர்வு நடைபெற உள்ளது.இவ்வருடம் இந்த திறந்த புத்தகத் தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் எழுத இயலும். முக்கியமாகத் தமிழ் வழியில்தேர்வு எழுதும் மாணவர்களுக்குத் தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே இருக்கும்.
தேர்வின் முக்கிய நோக்கங்கள்:
அறிவியல் மற்றும் ஆராய்ச் சித் துறையில் பள்ளி மாணாக் கர்களின் பங்கேற்பை அதிகரித்தல். அறிவியல் துறையில் இந்திய விஞ்ஞானிகளின் பங்கு பற்றி அறிதல். மிகப்பெரிய அறிவியல் ஆய்வில் பங்கேற்கலாம். இதில் ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நம் உணவுப் பழக்கம் ஏற்படுத்திய சுற்றுச்சூழல் தாக்கம் போன்றவற்றை அறியலாம்.தேர்வுக் கட்டணம் : 100 ரூபாய், விண்ணப்பிக்கக் கடைசி தேதி : 30-09-2020, தேர்வு நடைபெறும் நாள் : 29-11-2020 (ஞாயிறு) அல்லது 30-11-2020 (திங்கள்), தேர்வு நேரம்: 90 நிமிடங்கள் (1.30 மணி நேரம்) நேரம்: காலை 10. 00 மணி முதல் இரவு 8.00 மணி வரை எப்போது வேண்டுமானாலும் எழுதலாம். ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே எழுத முடியும்.
யாரெல்லாம் தேர்வு எழுதலாம்?
6-ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம். 6 முதல் 8 வரை ஒரு பிரிவாகவும் 9 முதல் 11 வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடைபெறும்.
தேர்விற்கான பாடத்திட்டம்
பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும், அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு என்ற புத்தகத்தில் இருந்து 20 சதவீதக் கேள்விகளும், வியான்கடேஸ் பாபுஜி கெட்கர் வாழ்க்கை வரலாறு மற்றும் நேரத்தை அளவிடுவதில் அவரின் அறிவியல் சாதனைகள் என்ற புத்தகத்தில் இருந்து 20 சதவீதக் கேள்விகளும், சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீதக் கேள்விகளும் இருக்கும். மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.
எவ்வாறு பதிவு செய்வது?
www.vvm.org.in என்ற இணையதளம் மூலமாக விண் ணப்பிக்க வேண்டும். பள்ளி மூலமாகவும் விண்ணப்பிக்க இயலும். மாணவர்கள் பள்ளி ஆசிரியர்களைத் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு இத்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். பள்ளி மூலமாக விண் ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பள்ளி அளவிலான சான்றிதழ் வழங்கப்படும். தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம். வெற்றி பெறும் மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு கண்ணபிரான், மாநில ஒருங்கிணைப்பாளர், வித்யார்த்தி விஞ் ஞான் மந்தன், இ-மெயில்: vvmtamilnadu@gmail.com. தொடர்புக்கு: 9942467764, 8778201926.